என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் காயம்"
தஞ்சாவூர்:
தஞ்சை வண்ணாரப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி அஞ்சலை (வயது 50). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி-அம்மன்பேட்டை புற வழி சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அஞ்சலை காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஞ்சலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கள்ளபெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
கொளத்தூர், பாலாஜி நகரில் நேற்று இரவு ஒருவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்ததும் சமையல் செய்ய வந்த 17 வயது சிறுவன் உள்பட சிலர் மது அருந்தினர். அப்போது சிறுவனிடம், கேட்டரிங் உரிமையாளர் ஒரு பொருளை தனது காரில் வைக்கும்படி கூறி உள்ளார்.
ஆனால் அந்த சிறுவன் காரை ஓட்டிப் பார்த்ததாக தெரிகிறது. மாதவரம், தணிகாசலம் நகர், குமரன் பஸ் நிலையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலை யோரத்தில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது மோதியது.
பின்னர் அவ்வழியே மொபட்டில் வந்த மேலும் 2 பெண்கள் மீது மோதி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயின் சுவரை உடைத்து தொங்கியபடி நின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவனிடம் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #accident
திருப்பதி:
திருப்பதி அடுத்த காளஹஸ்தி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையில் திருப்பதி, ரேணிகுண்டா, ஏர்பேடு காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை முதல் ஷிப்டுக்கு 30 பெண் தொழிலாளர்கள் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் காளஹஸ்தி-சென்னை நெடுஞ்சாலையில் வரதய்ய பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 30 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வரதய்ய பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் உள்ள சோனாரா மாகாணம் நோகாலஸ் நகரில் மினர்வா என்ற பெண், வாகனங்கள் அதிகம் செல்லும் 3 வழிச்சாலையை ஒன்றை கடக்க முயற்சித்தார். அப்போது பதற்றத்தோடு பாதிசாலையை கடந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவர் சாலையில் சறுக்கி விழுந்தார்.
அப்போது சாலையில் வேகமாக வந்த கார் மினர்வாவை இழுத்துக் கொண்டு சென்று நின்றது. காருக்கு அடியில் சிக்கிய மினர்வாவை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 7 -ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்று 6-வது நாளாக மழை நீடிக்கிறது.
கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தும், மண்சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் உள்ள மல்லிகா என்பவரின் வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த மல்லிகாவின் சகோதரி உமா மீது ஓடுகள் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை மற்றும் சூறை காற்று காரணமாக தேயிலைத் தோட்ட பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் ஒரு சில எஸ்டேட் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். #Rain
பேராவூரணி:
பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.
இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்